search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு முடிவுகள்"

    • செப்டம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை யுபிஎஸ்சி முதன்மை தேர்வு நடைபெற்றது.
    • தேர்வானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானை விரைவில் வரும்.

    செப்டம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.

    தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானை விரைவில் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது.
    • இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது. இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    தமிழகம் முழுவதும் 91 மையங்களில் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தேர்வும், 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் தேர்வும் நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட எம்.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது.

    இதனிடையே தமிழ் மொழித் தேர்வு கடினமாக இருந்ததாகவும், எனவே தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தேர்வு வாரி யத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 20-ல் இருந்து 15- ஆக குறைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    • சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
    • 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்தில் உள்ளது.

    சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும்,

    99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.

    • குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும்.
    • குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

    இதேபோல் குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 5446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

    • தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ந்தேதி வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
    • குமரி மாவட்டத்தில் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

    நாகர்கோவில் :

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வும், மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடந்து முடிந்துள்ளது. பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (10-ந் தேதி) தொடங்கியது. இந்த பணிகள் தொடர்ந்து 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடத்தப்படுகிறது.

    தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ந்தேதி வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. குமரி மாவட் டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இயக்குநரக அறிவுறுத்தல்படி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை போன்று பிற மாவட்ட விடைத்தாள்கள் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் படந்தாலுமூடு தூய இருதய மெட்ரிக் மேல்நிலைபள்ளி, வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலை பள்ளி ஆகிய இரு மையங்களும் விடைத்தாள் திருத்தும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (10-ந்தேதி) முதன்மை கண்காணிப் பாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர். இவர்கள் இன்று காலை 9 மணிக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு விடுப்பு அனுமதியில்லை என்றும், மருத்துவ விடுப்பில் ஆசிரி யர்கள் இருப்பின் தலைமை ஆசிரியர், தாளாளர் பரிந்துரையுடன் முகாம் அலுவலரிடம் அனுமதி பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பாடவாரியாக தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி, அறிவியல், கணினி தொழில்நுட்பம், வணி கவியல், கணக்குபதிவியல், பொருளியல் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 300 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப் பாளர்களாகவும், கூர்ந் தாய்வு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதனை போன்று உதவித்தேர்வர்கள் ஏப்ரல் 11-ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இப்பணியில் சுமார் 1200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 1500 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

    • தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், மற்றும் ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களுக்கும் எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
    • தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வு

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், மற்றும் ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களுக்கும் எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பலர் தேர்வு எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை தேர்வுகள் இயக்க இணையதளத்தில் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மறுகூட்டல்

    இந்த தேர்வுக்கான மறுகூட்டலுக்கு வருகிற 25, 26-ந்தேதிகளில் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல் முடிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    • மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுக்குரிய ஆசிரியர்கள் அவ்விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க வேண்டும்.
    • ஆனால், தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது.

    திருச்சி :

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத்தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஜூன் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில, இப்பல்கலைக்கழக தேர்வு நெறியாளர், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், பாரதிதாசன் பல்கலைக் கழக இளநிலை பருவத் தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்கள் வருகை மிக குறைவாக உள்ளதால், தேர்வு முடிவுகளை குறித்த நேரத்தில் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுக்குரிய ஆசிரியர்கள் அவ்விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க வேண்டும்.மேலும், இதற்கு கல்லூரி முதல்வர்களும் முழு ஒத்துழைப்பு தந்து ஆசிரியர்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இது குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளரிடம் கேட்டபோது, இது வழக்கமாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் சுற்றறிக்கைதான், விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. முடிந்தவரை விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சித்து வருகிறோம் என்றார்.

    சுற்றறிக்கை குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகி தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், பெரும் பாலான தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பவில்லை. இதனால் இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணியில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

    வழக்கமாக ஒரு நாளைக்கு காலை 20, மாலை 20 என 40 விடைத்தாள்கள் மட்டுமே திருத்தப்படும். ஆனால், தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 60 முதல் 70 விடைத்தாள்களை திருத்த வேண்டியுள்ளது. மேலும் ஒரு விடைத்தாள் திருத்த பல ஆண்டுகளாக ரூ.12 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்காததாலும் பலர் இந்தப் பணியை தவிர்த்து விடுகின்றனர் என்றனர்.

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 84.67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேரும் தேர்வு எழுதினர்.  இந்நிலையில்தான் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 9-ல் தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 27-ந்தேதி (இன்று) காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன.விழுப்புரம் மாவட்ட முதன்மை அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 189 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன இதில் அரசு பள்ளிகள் 130 தனியார் பள்ளிகள் 69 உள்ளனமொத்த தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 308 பேர் ஆகும் இதில் 19 ஆயிரத்து 517 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டை விட 8 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 795 பேர் தேர்வு எழுதினார்கள் இதில் 12 ஆயிரத்து 950 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 84.67 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    • ஜூலை 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது
    • தேர்வு முடிவுகளை http://dge.tn.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம்

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது. சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. http://dge.tn.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த பிளஸ் 1 தேர்வுகளின் முடிவுகள் வரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. #TNResults
    சென்னை:

    தமிழக மாநில பாடத்திட்டம் மற்றும் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் கீழ் படித்த பிளஸ் 1 மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.  விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஜூன் 2, 4இல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

    கீழ்கண்ட இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    http://www.tnresults.nic.in
    http://www.dge1.tn.nic.in
    http://www.dge2.tn.nic.in
    ×